Untitled Document
2011
22
May
இந்திய நிலக்கரி மையத்தில் 1080 நிர்வாக பயிற்சியாளர் வேலை


மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 1080 பணியிடங் களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாக பயிற்சியாளர்: மைனிங்- 319, எலக்ட்ரிக்கல்-159, மெக்கானிக் கல்-145, சிவில்-50, இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்- 9, கெமிக்கல்/மினரல் - 20, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் -7.
தகுதி: மேற்குறிப்பிட்டபணிக ளுக்கு குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடப் பிரிவில் பிஇ அல்லது பிடெக் அல்லது பிஎஸ்சி இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி.
வயது: 31.3.2011ன்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500ஐ Coal India Limited என்ற பெயருக்கு கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப்பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in இணையதளத்தை பார்க்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Manager (Personnel Recrîitment), Coal India Limited, 10 NS Road, Post Bag No.43, GPO, Kolkata 700001.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 4.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: ஜூன் 13.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,