Untitled Document
2011
22
May
துணை ராணுவபடையில் 765 கான்ஸ்டபிள் பணியிடங்கள்


சாஸ்த்ராசீமாபால் (எஸ்எஸ்பி) என்றழைக்கப்படும் துணை ராணுவப்படையில் காலியாக உள்ள 765 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.
மொத்தமுள்ள 765 இடங்களில் சமையலர்-252, துணி துவைப்ப வர்-129, முடி திருத்துபவர்-66, சபல் வாலா-122, வாட்டர் கேரியர்-135,  வெயிட்டர்-6, பெயின்டர்-9, கொல்லர்-4, டெய்லர்-15,செருப்பு தைப்பவர்-18, தோட்டக்காரர்-9 என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது: 15.6.2025 அன்று 18 லிருந்து 23க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு. சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி  மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட டிப்ளமோ.
உடற்தகுதி தேர்வு, எழுத்துதேர்வு, டிரேடு தேர்வு, மருத்துவசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- ä The Commandant, 25th Bn, SSB Ghitorni என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மே 7-13 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அல்லது www.vvb.nic.in அல்லது www.vvbrec.gov.in இணைய தளங்களை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commandan, 25h Bn., SSB Ghiorni PO Arjàngarh, Main Mehraàli, Gàrgoan Road, New Delhi 110 047.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15.





For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,