அம்மை நோய் தாக்குதல் ஷூட்டிங்கிற்கு பார்வதி ஓய்வு
பூ, மரியான் படங்களில் நடித்ததுடன் உத்தமவில்லன் படத்தில் நடித்து வருபவர் பார்வதி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அம்மை நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அம்மை நோய் தாக்கி இருக்கும் முகத்தையும் அவர் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘எனக்கு அம்மை நோய் தாக்கி இருக்கிறது. இந்நிலையில் என் புகைப்படத்தை நான் ஏன் வெளியிட்டிருக்கிறேன் என்றால் இதற்கு ஒரு பாசிடிவ் பக்கம் இருக்கிறது.
ஒருமுறை இந்நோய் தாக்கினால் இது மீண்டும் தாக்காது என்று கூறி இருக்கிறார்கள். எனவே அமைதியாகவும், பொறுமையாகவும் நான் இருப்பதை உணர்த்தவே இந்த படம். எல்லோரும் இந்தளவுக்கு தங்களது மனதளவில் தாங்கிக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. கடந்த வாரம் ரயிலில் பயணம் மேற்கொண்டபிறகு இந்த நோய் தாக்கியது. இதுபோன்ற அறிகுறி யாருக்காவது தென்பட்டால் பொது இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். நமக்கு நாமே இந்த அறிவுரையை வளர்த்துக் கொள்வோம்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.