Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
23
Mar
பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஹாலேப், ஜோகோவிச் சாம்பியன்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்தியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச், சிமோனா ஹாலேப் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.அமெரிக்காவில் இந்தியன்வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடந்தது. மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரொமேனியாவின் சிமோனா ஹாலேப்பும், செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச்சும் மோதினர். இரண் டாம் சுற்றில் டாரியா காவ்ரிலோவா, மூன்றாம் சுற்றில் வார்வாரா லெப் சென்கோ, காலிறுதியில் கார்லா சுவாரஸ் நெவரோ ஆகியோரை மூன்று செட்களில் போராடி வென்றும், அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் காயத்தால் விலகியதாலும் மிகவும் சிரமப்பட்டே இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் சிமோனோ ஹாலேப்.

இறுதிப்போட்டியிலும் இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் ஹாலேப் அவதிப்பட்டார். இரண்டாவது செட் துவங்குவதற்கு முன்னர் அவரது பயிற்சியாளர் வந்து காயத்துக்கு சிகிச்சை அளித்தார். இரண்டாவது செட்டில் பல முறை முழங் காலை பிடித்துக் கொண்டு நின்ற சிமோனா ஹாலேப், வலியால் தவிப் பது வெளிப்படையாகத் தெரிந்தது. இவற்றையெல்லாம் புறம் தள்ளி, ஜான்கோவிச்சை ஹாலேப் வென்றார்.

சர்வீஸில் காணப்பட்ட குளறுபடிகளையும் மீறி ஹாலேப், 2010ம் ஆண்டு சாம்பியனான ஜெலீனா ஜான்கோவிச்சை 2-6, 7-5, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்ட த்தை கைப்பற்றினார். ஹாலேப்புக்கு ரூ.5.60 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றி குறித்து சிமோனா ஹாலேப் கூறுகையில், ‘‘நான் சிறப் பாக விளையாடாத நிலையில் இன்று எவ்வாறு வெற்றி பெற்றேன் என்றே தெரியவில்லை. நான் நன்றாக விளையாடாவிட்டாலும், கடைசி வரை போராட விரும்பினேன்.

 எனக்கும், எனது பாணி ஆட்டத்துக்கும் இறுதி வரை போராடுவது மிகவும் முக்கியமானது. சிறிது சோர்வாக இருந்தேன், ஆனால், அது எனது வெற்றியை தடுக்கும் அளவு இல்லை. இரண்டாவது செட்டில் தசை பிரச்னை இருந்தது. ஆனால், அதனை நான் விளையாடும் போது நினைவில் வைத்திருக்கவில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு பந்தையும் வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். இதுதான் கடைசிவரை என் மனதில் இருந்தது,’’ என்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement