நியூட்ரினோ எதிர்த்து வைகோ உண்ணாவிரதம்
மதுரை: தேனி மாவட்டம் போடி அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை பழங்காநத்தத்தில் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதத்தை துவக்கிவைத்து வைகோ பேசியது;நியூட்ரினோவால் பொது மக்களுக்கும், முல்லை பெரியாறு, அணை, நீர்ஆதாரம் ஆகியவற்றிற்கு பேரழிவு ஏற்படும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த மையத்தை அமைக்க பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் இதை அமைப்பதை ஏற்க முடியாது. இதற்காகத்தான் அரசியல் கலப்பற்ற இந்த எதிர்ப்பு இயக்கத்தை துவக்கி போராடி வருகிறேன். தமிழக மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து நியூட்ரினோவை எதிர்த்துப் போராட வரவேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.