அரசு விளம்பரங்களில் நடிக்க ஹீரோக்கள் மறுப்பு
கோலிவுட், மல்லுவுட் நடிகர்கள் அரசு விளம்பரங்களில் அவ்வப்போது நடிக்கின்றனர். கேரளாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் திரைப்பட விநியோகம், ஆடியோ, வீடியோ காப்பி ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் உரிமை போன்றவற்றுக்கு 5 சதவீதம் வாட் வரி விதித்து அறிவித்தது. ஏற்கனவே 14 சதவீதம் வாட் வரி இருக்கிறது. இதையடுத்து வாட் வரி 19 சதவீதமாக விதித்து இருப்பதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள அரசு விளம்பரங்களில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், திலீப், ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் அவ்வப்போது நடித்து வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்ட 5 சதவீதம் கூடுதல் வாட் வரிக்கு நட்சத்திரங்கள் மற்றும் கேளர திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேரள அரசு விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுக்க உள்ளதாக கேரள படவுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விரைவில் திரையுலகினர் கூடி ஆலோசித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட உள்ளனர்.