வெங்கட்பிரபு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சூர்யா கொடுத்த கல்தா
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்' . இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. மே 1ம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான பாடல்களை இசை அமைத்து தருவதில் யுவன் சங்கர் ராஜா மெத்தனம் காட்டிவருவதாக பிரச்னை எழுந்தது. சூர்யா, நயன்தாரா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக மோகன் ஸ்டுடியோவில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான பாடலை யுவன் கம்போஸ் செய்து தரவில்லையாம். இதனால் அப்செட் ஆன சூர்யா, இசை அமைப் பாளர் தமனை அழைத்து குறிப்பிட்ட பாடலுக்கு இசை கம்போஸ் செய்து தர கேட்டார்.
அவரும் இந்தியில் பிரபு தேவா இயக்கிய ' ஆர் ராஜ்குமார்' படத்தில் இடம்பெற்ற பாடலை ரீமிக்ஸ் செய்து தந்தார்.சூர்யாவின் இந்த போக்கு உறவினர்களான வெங்கட் பிரபு, யுவன் இருவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் பின்னணி இசை பணிகளில் பணியாற்றுவதற்கு யுவன் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த ஆர்.டி.ராஜசேகர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தி படத்தில் பணியாற்றுவதால் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனை வைத்து ரீமிக்ஸ் பாடலை படமாக்க உள்ளார் வெங்கட்பிரபு.