நெல்லையில் கொடூரம் இளம்பெண் வெட்டிக்கொலை : கணவர் கைது
நெல்லை: நெல்லை அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். நெல்லை அருகேயுள்ள மணக்கரையை சேர்ந்தவர் அன்பரசு(32). லோடு ஆட்டோ டிரைவர். மனைவி பொன் ஈஸ்வரி (27). தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பொன் ஈஸ்வரி, பாளை இந்திராநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்தார்.இன்று காலை அன்பரசு, மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த பொன்ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த பொன் ஈஸ்வரி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் கிடைத்து, பாளை ஐகிரவுண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொன் ஈஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதற்கிடையே, அன்பரசு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அன்பரசுவுக்கும், பொன் ஈஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. பெற்றோர் வீட்டில் இருந்த பொன் ஈஸ்வரிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அன்பரசு இக்கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.