ஆன்லைனில் அஜீத் படம் வெளியீடு
இயக்குனர் சேரன் இயக்கிய ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் நடித்திருந்தனர். இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக டிவிடியாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தனது படம் தவிர மற்ற படங்களையும் டிவிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், திரிஷா, அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ' என்னை அறிந்தால்' படம் முறைப்படி ஆன்லைனில் வெளியாகி உள்ளது. எச்டி தரத்துடன் ஆங்கில சப் டைட்டிலுடன் இது வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் மட்டுமே இதனை பார்க்க முடியும். டி.வி.டியிலும், ஆன்லைனிலும் படங்கள் வெளிவந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுபோல் மேலும் பல படங்கள் இந்த பாணியில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.