இந்திய
அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்சூரன்ஸ்
நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம்
நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:
நிர்வாக
அதிகாரி (ஸ்கேல் - 1): 246 இடங்கள். (பொது - 125, ஒபிசி - 60, எஸ்சி - 40,
எஸ்டி - 21). இவற்றில் 19 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன. பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:
கணிதம்/
புள்ளியியல்/ ஆக்சூரியல் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் அல்லது
பட்டப்படிப்புடன் அக்சூரியல் சொசைட்டி ஆப் இந்தியா நடத்தும் தேர்வில்
குறைந்த பட்சம் 4 தாள்களில் தேர்ச்சி.
28.2.2025
தேதிப்படி 21 லிருந்து 30க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 1.3.1985க்கு
முன்னதாகவும், 28.2.1994க்கு பின்னதாகவும் (இரண்டு தேதிகள் உட்பட)
பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும்,
முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.600.
(எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.50). இதை டெபிட்/ கிரெடிட் கார்டுகள்/
இன்டர்நெட் பேங்கிங்/ ஐஎம்பிஎஸ்/ கேஷ் கார்டுகள்/ மொபைல் வாலெட்ஸ்
ஆகியவற்றில் ஏதாவது ஒரு முறையில் செலுத்தலாம். ஆன்லைன் எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு
நடைபெறும்.