எட்டாவது படித்தாலே அரசு வேலையில் சேரமுடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கே எட்டாம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த குறைந்தபட்ச கல்வியை எட்டவேண்டும் என்ற நோக்கில் கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்தால்தான் ஐடிஐ உள்ளிட்ட தொழிற்படிப்புகளில்கூட சேரமுடியும்.
ஆனால் சிலருக்கு 10ம் வகுப்புக்கு பின்னர் மேல்நிலைக்கல்வியை பள்ளிகளில் தொடர விருப்பம் இருப்பதில்லை. 10ம் வகுப்பு முடித்தவுடன் தொழிற்சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாகவே வேலைவாய்ப்புகளை குறிவைத்து பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இவர்கள் முதலில் சேருவது தட்டச்சுப்பயிற்சி. கம்ப்யூட்டர் யுகமாகிவிட்ட நிலையில் தட்டச்சுப்பயிற்சி மட்டும் முடித்தால் பணி வாய்ப்பை பெறுவது கடினம்.
இதற்கு பிறகு என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண் டும்? என்ற குழப்பத்தில் தவிப்பவர்களுக்கு ஆபீஸ் ஆட்டோமேஷன் படிப்பு (Computer on Automation ExaminationDecember 2010) உதவுகிறது. தமிழக அரசின்
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் இந்த சான்றிதழ் படிப்பிற்கு தற்போது மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படும் இளநிலை தட்டச்சர் தேர்வில் (தமிழ்/ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இத்தேர்வு நடைபெறும். எழுத்துத்தேர்வு வரும் டிச.18லும், தட்டச்சுத்தேர்வு டிச.19லும் இரண்டு தாள்களாக தலா 2 மணி நேரம் நடத்தப்படும். எழுத்துத்தேர்வுக்குரிய உபகரணங்கள் தேர்வு மையத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை ரூ.50 செலுத்தி சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரிலும், www.tndte.com என்ற இணையதளத்தில் ரூ.47 செலுத்தி பதிவிறக்கமும் செய்யலாம். வரும் நவ.8ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பம் பெற முடியும்.
தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க ரூ.530 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ‘Additional Director of Technical Examination (Exam) Chennai25‘ என்ற பெயரில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ‘Additional Director of Technical Examination (Exam I/C), Director of Technical Education, Chennai 600025‘ என்ற முகவரிக்கு வரும் நவ.12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook