திருவள்ளூர் கோயில்களில் மகா சிவராத்திரி விழா
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள பல்வேறு அம்மன் மற்றும் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.புட்லூர் ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை கிராம பெண்கள் ஒன்றுகூடி கோயிலின் முன்பு பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு மயானகொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், பெருமாள்பட்டு ஸ்ரீஞானபிரசூனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது.இவ்விழாவில், அமைச்சர் ரமணா, எம்.எல்.ஏ., மணிமாறன், ஒன்றிய குழு தலைவர் புட்லூர் சந்திரசேகர், துணைத் தலைவர் சக்தி ரமேஷ், கவுன்சிலர்கள் செல்வகுமாரி அண்ணாதுரை, ஜி.பிரகாசம், சுப்பிரமணி, ராஜசேகரன் மற்றும் துளசிராமன், ரவிச்சந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.