இங்கிலாந்தில் நாயின் காதில் இயேசுவின் உருவம் : அதிர்ஷ்டம் என்கிறார் உரிமையாளர்
ஸ்வான்சீ: இங்கிலாந்தில் ஒரு பெண் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் காது மடலில் இயேசுவின் உருவம் தெரிகிறது. இந்த நாயை தான் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் என்று அந்த பெண் உறுதியாக நம்புகிறார்.இங்கிலாந்து நாட்டில் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் ராச்செல் ஈவான்ஸ் (25). இவரது கணவர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (28). ராச்செல் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வான்சீ பகுதியில் மற்றொரு வீட்டுக்கு 24 வயதான தனது சகோதரி லேவிஸ் இவானுடன் குடியேறினார்.அப்போது தான் ஆசையாக வளர்த்து வரும் டெர்ரியர் ரக டேவ் என்ற செல்ல நாய் உட்பட 5 நாய்களையும் அழைத்து சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை டேவ் உட்பட 5 நாய்களையும் ராச்செல் குளிப்பாட்டி விதவிதமாக படமெடுத்தார்.
அப்போது டேவ்வின் காது மடலில் இருக்கும் தசைகள் விரிந்து இயேசுவின் உருவம் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.உடனே டேவ்வின் காது மடலை விதவிதமாக படமெடுத்து, தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார். நான் இந்த வீட்டுக்கு வந்த பிறகு, எனது செல்ல நாயின் காதில் இயேசுவின் உருவம் தெரிந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இயேசுவையும் அதிர்ஷ்டத்தையும் நம்புவதால், இனி இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று ராச்செல் பெருமையுடன் கூறினார்.அவரது டேவ் நாயின் காதில் இயேசுவின் உருவம் தெரிவதை, ஸ்வான்சீ பகுதியில் உள்ள மக்கள் ஆர்வமாக வந்து பார்த்து அதிசயித்து வருகின்றனர்.