சென்னை குடிநீர் வாரியம் ரூ. 226.98 கோடி வரி வசூல்
சென்னை, டிச.19- சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம் ஆகியவை தான் சென்னை குடிநீர் வாரியத்தின் முக்கிய வருவாய். வாரியத்தின் 15 பகுதிகளில் 2014-15ம் நிதியாண்டில் 31.12.2024 வரையிலான கேட்புத் தொகை ரூ.451.69 கோடியில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியாகவும், கட்டணமாகவும் 30.11.2025 வரை வாரியம் ரூ.226.98 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் வசூலை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 30.11.2025 வரை ரூ.21.38 கோடி அதிகம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள நிலுவைத் தொகை 31.03.2015க்கு முன்பாக வசூல் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கான கேட்புத் தொகை கனிணி மயமாக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர்கள் தாங்கள் செலுத்தும் தொகைக்கு கனிணி மூலம் ரசீது வழங்க வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. நுகர்வோர்கள் தங்களின் நிலுவை மற்றும் நடப்பு வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட கால நிலுவைத் தொகை மீது சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று சட்டம் 1978ன்படி நடவடிக்கைக்கு உள்ளாவதை தவிர்க்குமாறு கோரப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.