உலகம் முழுவதும் கடல்சார்ந்த தொழில்களுக்கு என்றுமே கிராக்கி அதிகம். பரந்து விரிந்த கடலைப்போலவே வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. கடல்சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை உத்திரவாதம் உண்டு. இதனால்தான் இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் The Centre of Advanced Study (CAS) »TC அங்கீகாரத்துடன் எம்எஸ்சி பிரிவில் பல்வேறு கடல்சார் படிப்புகளை வழங்கி வருகிறது. எம்எஸ்சி பிரிவில் மரைன் பயாலஜி அண்ட் ஓஷனோகிராபி, கோஸ்டல் அக்வாகல்ச்சர், மரைன் பயோ டெக் னாலஜி, மரைன் புட் டெக்னாலஜி, மரைன் மைக்ரோ பயாலஜி, ஓஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மரைன் பார்மகாலஜி, மரைன் கெமிஸ்ட்ரி ஆகிய முழுநேர படிப்புகள் நடத்தப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு கடல்சார்ந்த தொழில்கள் மட்டுமின்றி கல்வித்துறை, ஆராய்ச்சித்துறைகளிலும் வேலைவாய்ப்பு கள் காத்திருக்கின்றன.
இதில் சேருவதற்கு தனித் தனியாக கல்வித்தகுதி, மதிப் பெண் சதவீதம் வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகள் ஆங்கில வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளின் கால அளவு 2 ஆண்டுகள். ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்களாக பிரித்து (ஜூலை-நவம்பர், டிசம்பர்- ஏப்ரல்) தேர்வுகள் நடத்தப்படும். சம்பந்தப்பட்ட இளங்கலை பாடப் பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, ஓபிசி பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவுப்படி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு மற்றும் உரிய சலுகைகள் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.300ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.200ம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம், கட்டண விகிதம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook