Untitled Document
2011
11
May
பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ


இந்தியாவை பொருத்தவரை அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. பிளாஸ்டிக் தொழிற்சாலைகளும் அதிகரித்து உள்ளன. இவற்றில் பிளாஸ்டிக் சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. சென்னையில் மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஒன்றரை வருட  போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் (பிஓபிஎம்டி) படிப்பு, 3 வருட  டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் மோல்ட் டெக்னாலஜி (டிபிஎம்டி), 3 வருட டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (டிபிடி), ஒன்றரை வருட போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசஸிங் அண்ட் டெஸ்டிங் (பிஜிடிபிபிடி) உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பத்தை தயார் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்ப கட்டணம், கல்விக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதர விவரங்களை 'Central Institute of Plastics Engineering & Technology, Guindy, Chennai600032' என்ற முகவரியில் அல்லது 044&22254780, 22254783 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,