Untitled Document
2011
11
May
பிர்லா இன்ஸ்டிடியூட்டில் எம்இ, எம்டெக் அட்மிஷன்


இந்தியாவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் முதுநிலை படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்கு தகுதிப்படுத்தும் வகையிலான முதுநிலை படிப்புகளை அளித்து வருகின்றன. ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் முதுநிலை அறிவியல், பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

* எம்இ பிரிவில் சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சாப்ட்வேர், ஸ்பேர்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ராக்கெட்டரி, கம்ப்யூட்டர் எய்டட் அனாலிசிஸ் அண்ட் டிசைன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

* எம்.பார்ம் பிரிவில் பார்மசூடிகல்ஸ், பார்மசூடிகல் கெமிஸ்ட்ரி, பார்மகாக்னஸி, பார்மகாலஜி, கிளினிகல் ரிசர்ச், குவாலிடி அஷ்யூரன்ஸ், ரெகுலேட்டரி அபைர்ஸ், கிளினிகல் ரிசர்ச் அண்ட் பார்மகோவிஜிலன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

* எம்.டெக் பிரிவில் பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி டெக்னாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ப்யூல்ஸ் அண்ட் கம்பஸ்டன், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, நானோசயின்ஸ் அண்ட் நானோடெக்னாலஜி, நியூ மெட்டீரியல்ஸ் அண்ட் பிராசசிங் டெக்னாலஜி, பாலிமர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ரிமோட் சென்ஸிங், சயின்டிபிக் கம்ப்யூட்டிங் பாடப்பிரிவுகள் உள்ளன.

* எம்எஸ்சி பிரிவில் அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு மேதமேட்டிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் அளிக்கப்படுகிறது.

* இது தவிர மாஸ்டர் ஆப் அர்பன் பிளானிங் (எம்.யு.பி) மற்றும் பிஜி டிப்ளமோ இன் பயோ அனாலிடிகல் டெக்னிக்ஸ், பார்மகோவிஜிலன்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன.

இப்படிப்புகளில் சேர விண்ணப்ப கட்டணமாக ரூ.1500ஐ 'Birla Institute of Technology' என்ற பெயரில் ராஞ்சியில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டிடியாக செலுத்த வேண்டும். www.bitmesra.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'The Dean (Admissions), Birla Institute of Technology, Mesra, Ranchi835215' என்ற முகவரிக்கு வரும் மே 27க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,