இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரமற்ற ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உரிய பயிற்சிகள் அளித்து அவர்களது கல்வித்தரத்தை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரியும் பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு கூடுதல் கல்வித்தகுதி அளிக்கும் சிறப்பு முதுநிலை படிப்புகள் திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன.
எம்இ பிரிவில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங், பவர் சிஸ்டம் இன்ஜினியரிங், எம்பெடட் சிஸ்டம்ஸ் டெக்னாலஜிஸ், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இதில் சேர விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500) செலுத்த வேண்டும். கட்டணத்தை ‘The Registrar, Anna University of Technology Tiruchirappalli, Tiruchirappalli620024‘ என்ற பெயரில் திருச்சியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.
www.tau.edu.in/mbcbs என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல்கள், விண்ணப்ப கட்டண டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டண சலுகை கோரும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றொப்பம் பெற்ற சாதி சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘The Overall Coordinator, ME Through MBCBS, Anna University of Technology Tiruchirappalli, Tiruchirappalli 620024‘ என்ற முகவரிக்கு வரும் மே 16க்குள் அனுப்ப வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook