ஊட்டியில் இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில், விலங்குகள் அதிகம் உள்ளன. இதனால் இப்பகுதி வழியாக எந¢த விதமான விமானங்களும் செல்ல அனுமதியில்லை. மேலும் ஹெலிகாப்டர், கிளைடர் விமானங்கள் பறப்பதற்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.முக்கிய விவிஐபிக்களுக்கு மட்டுமே ஹெலிகாப்டர் அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அதிகளவில் ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்துள்ளார். தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில், கோடநாடு எஸ்டேட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த எஸ்டேட்டை ஆய்வு செய்ய பெங்களூர் நீதிமன்றத்தில் இருந்து ஒரு குழு வருவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவியது.
இதை உறுதிப்படுத்துவது போல் ஒரு தனியார் ஹெலிகாப்டர் ஊட்டியில் ஒரு தனியார் பள்ளி ¬மாதனத்தில் நேற்று வந்திறங்கியது. ஹெலிகாப்டரில் வந்தவர்கள் சொகுசு காரில் குன்னூர் சென்றனர். காரில் சென்ற குழு கோடநாடு எஸ்டேட்டை ஆய்வு செய்ய வந்த குழுவாக இருக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால், அவர்கள் சென்னையில் ஒரு பிரபல தனியார் நிறுவன தலைவர்கள் என்பதும் குன்னூரில் தங்களது நிறுவன பணிகளை மேற்கொள்ள வந்ததும் பின்னர் தெரிந்தது. இந்த சம்பவம் ஊட்டியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.