ஜெ.வை தமிழக சிறைக்கு மாற்ற கோரிய மனு பெங்களூர் ஐகோர்ட்டில் திடீர் வாபஸ்
பெங்களூர்: பெங்களூர் சிறையிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வைத்து தமிழ்நாடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று காலை தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலைமையில் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் லோபோ முத்திரை, ‘ஜெயலலிதாவை ஜாமீனில் விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்றார். அதை தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.