வாலிபர் கொலை போலீசார் விசாரணை
தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் புது கன்டெய்னர் டெர்மினல் அருகே கடலில் இன்று அதிகாலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதை பார்த்து துறைமுக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே கத்தி குத்து காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட அந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.