ஆதிசைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
திருத்தணி: தமிழ்நாடு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு திருத்தணி புதிய தோட்ட சத்திரத்தில் நேற்று நடந்தது. இதில் ஏற்கனவே கடந்த 9 வருடமாக தலைவராக உள்ள தர்மலிங்கம் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக புருஷோத்தமன், பொருளாளராக நடராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதுபோல் புதிய தோட்டக்கார சத்திர பராமரிப்பு குழு தலைவராக திருத்தணி முருகன் கோயில் முன்னாள் பிஆர்ஓ ஆ.மோகன் தேர்வானார். ஏகாம்பரம் செயலாளராகவும் ராதாகிருஷ்ணன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.