வக்கீலிடம் 3 பவுன் அபேஸ்: பைக் ஆசாமிகளுக்கு வலை
தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (40). ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வேலைமுடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காசிமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் பைக்கை நிறுத்தி கேட்டனர். அப்போது திடீரென பின்னால் இருந்த வாலிபர், செல்வகுமாரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். அவர்களை துரத்தியும் செல்வகுமாரால் பிடிக்க முடியவில்லை.இதுகுறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.