நெல்லை எம்.எஸ். யுனிவர்சிட்டியில் எம்பில் படிக்க மாணவர் சேர்க்கை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தெரிவு அடிப்படை அலகுகள் முறையில் (சிபிசிஎஸ்) நடத்தப்படும் இளநிலை ஆய்வு படிப்புகளுக்கு 2011&12ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, சமூகவியல், தொடர்பியல், பொருளாதாரம், வணிகவியல் (முழுநேரம்), கல்வியியல் (பகுதி/முழுநேரம்), புள்ளியியல் (பகுதி/முழுநேரம்), இயற்பியல், வேதியியல், கடல்வாழ் உயிரின உயிரிதொழில்நுட்பவியல் (ராஜாக்கமங்கலம் மையம்), நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் (ராஜாக்கமங்கலம்), தகவல் தொழில்நுட்பவியல் (பகுதி/முழுநேரம்), புவிகடல் தொழில்நுட்பவியல், உயிரி தொழில்நுட்பவியல் (ஆழ்வார்குறிச்சி மையம்), உடற்கல்வியியல், மேலாண்மையியல், சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்தல், பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவியல் உள்ளிட்ட 23 பிரிவுகளில் எம்பில் படிப்பை மேற்கொள்ளலாம்.
மேலும் பொறியியல் பிரிவில் எம்இ கணினி அறிவியல் (பகுதிநேரம்), எம்டெக் தகவல் தொழில்நுட்பவியல் (பகுதி/முழுநேரம்), எம்டெக் தகவல் தொழில்நுட்பவியல் 6 ஆண்டு இணைவுப்படிப்பு, எம்காம் (கணக்கியல் மற்றும் நிதியியல்), உடற்கல்வியியல் (எம்பிஎட்), எம்எட், எம்பிஏ (நிதியியல்), எம்பிஏ ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (வார இறுதிநாட்கள்) (டான்செட்&2011 நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்), முதுகலை தொழில்நுட்பவியல்& நுண்ணியல் உயிரி தொழில்நுட்பவியல் (ராஜாக்கமங்கலம் மையம்) உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இது தவிர முதுநிலை பட்டயப்படிப்பில் புவி தொழில்நுட்பம், குற்றவியல் மற்றும் தடயஅறிவியல் (பகுதிநேரம்), தனியார் துப்பறிதல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை (பகுதிநேரம்), பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவியியல், மனித உரிமையியல் மற்றும் கடமையியல் கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.
இப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை நேரில் பெற ரூ.300, தபால் மூலம் பெற ரூ.320 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒரு விண்ணப்பம் இலவசம். விண்ணப்ப கட்டணத்தை டிடியாக நேரில் அல்லது தபாலில் அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணவிடை, தபால்விடை, காசோலை, பணம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்
மே 31க்குள் ‘பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி& 627012Õ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். படிப்புகளுக்கான அடிப்படை கல்வித்தகுதி, கல்விக்கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்களை www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.