Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
06
Sep
மெக்சிகோவில் கத்தியால் ஒரே வீச்சு நாயின் மூக்கு போச்சு :உயிர் பிழைத்த அதிசயம்


மெக்சிகோ சிட்டி:மெக்சிகோ நகரில் 5 வயதான செல்ல நாய்க்குட்டி, எஜமானனை கடித்தது. உடனே, அதன் மூக்கை கத்தியால் ஒரே வீச்சில் சீவி தள்ளினார். நடுரோட்டில் மூக்கு இல்லாமல் பரிதவித்த நாய், பின்னர் டாக்டர் ஒருவரால் காப்பாற்றப்பட்டது.லத்தீன் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நகரில் 5 வயது பெண் நாயை ஒருவர் நீண்ட நாட்களாக வளர்த்து வந்தார். அதற்கு பிரெஸ்சா என பெயர் சூட்டினார். ஒரு நாள் அவர் வாக்கிங் செல்லும்போது, நாய்க்கு தின்பண்டத்தை காட்டியபடியே அழைத்து சென்றார். நீண்ட நேரம் பொறுத்து பார்த்த நாய், அவர் கையில் இருந்த தின்பண்டத்தை கவ்வியது. இதில் எஜமானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர், கையில் வைத்திருந்த நீண்ட கத்தியால் நாயின் மூக்கை சீவி தள்ளினார். அலறி துடித்த நாயை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

சுவாசிக்க கூட முடியாமல் திணறிக் கொண்டிருந்த நாய், உயிரை விடும் நிலையில் இருந்தது. இதை ஜீசஸ் பரேட்டீஸ் என்ற விலங்குகள் நல மருத்துவர் பார்த்து விட்டார். அவர் அந்த நாயை தனது மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். பின்னர் அதற்கு 3 மணி நேரம் போராடி ஆபரேஷன் செய்தார். அதன் நாக்குக்கு அருகிலே உள்ள தசைகளை வைத்து மூக்கை மீண்டும் பொருத்தினார். மெக்சிகோ நகரத்தில் உள்ள சான்டீரியோ மிலாகிரஸ் என்ற விலங்குகள் காப்பகத்தில், பிரெஸ்சா இப்போது நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.பாகிஸ்தானில் கனமழை  வெள்ளத்தில் சிக்கி 55 பேர் பலி

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement