ஊத்துக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சீனிவாசன், கவுன்சிலர்கள் அண்ணாதுரை, தனலட்சுமி, வள்ளி, என்சிசி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் நரேந்திரன் வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் சேக்தாவூத் மாணவர்களின் பேரணியை தொடங்கி வைத்தார்.அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, திருவள்ளூர் சாலை, அண்ணாசிலை, எம்ஜிஆர் சிலை, நேரு பஜார் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம், மழைநீரை சேகரிப்போம் என்ற கோஷங்களை எழுப்பியபடியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனர். துப்புரவு மேற்பார்வையாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.