சுருட்டு பிடித்த பெண் தீயில் கருகி பலி
திருச்சி: திருச்சி ஏர்போர்ட், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி லட்சுமி (65). இரவு வீட்டில் சுருட்டு புகைத்து கொண்டிருந்தபோது, அங்கு சிலர் வரும் சத்தம் கேட்டு, குடித்து கொண்டிருந்த சுருட்டை மறைத்து வைத்தார். சுருட்டில் இருந்த தீ, லட்சுமியின் புடவையில் பற்றியது. தீயில் கதறி துடித்து கூச்சல் போட்ட, லட்சுமியை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி இறந்தார். ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.