உலககோப்பையை வென்ற திருப்தியோடு சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஜெர்மனி கேப்டன் பிலிப் லாம் ஓய்வு
பிரேசிலில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டி தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த அணியின் கேப்டன் பிலிப் லாம் (30), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து டுவிட்டர் இணையதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அதில், ‘சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற இதுவே சரியான சமயம் என நினைக்கிறேன். ஜெர்மனி அணிக்காக உலக கோப்பையை வென்றது மிகுந்த திருப்தி அளிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடிய அனுபவம் மகத்தானது‘ என்று குறிப்பிட்டுள்ளார். பேயர்ன் மூனிச் கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு குரோஷியா அணிக்கு எதிராக அறிமுகமான லாம், ஜெர்மனி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.