ரியல் பெண் பாக்ஸர்களுக்கு கோச் ஆகிறார் மாதவன்
சென்னை: ரியல் பெண் பாக்ஸர்களுக்கு பயிற்சி கொடுப்பவராக நடிக்கிறார் மாதவன்.இந்தி மற்றும் தமிழில் தயாராகும் படத்தில் நடிக்கிறார் மாதவன். இந்தப் படத்தை சுதா கே. பிரசாத் இயக்குகிறார். தமிழில் இந்தப் படத்துக்கு இறுதிச் சுற்று என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது:இந்தப் படத்தில் மாதவன் பாக்ஸிங் கோச் ஆக நடிக்கிறார். இதற்காக லாஸ் ஏஞ்ஜல்ஸ் போய், உடலை கட்டுக்கோப்பாக ஆக்கி கொண்டு வந்திருக்கிறார். இதில் ரிதிகா சிங் மற்றும் மும்தாஜ் சார்கர் என 2 பெண்கள் ஹீரோயினாக நடிக்கின்றனர். இவர்கள் தொழில்முறையிலான ரியல் பாக்ஸர்கள். இவர்களுக்குத்தான் மாதவன் பயிற்சி அளிக்கிறார். இது விளையாட்டைப் பற்றிய படமாக இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும். ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்க உள்ளது. இந்தி படத்துக்கும் சேர்த்து சென்னையிலேயே செட் போட்டு எடுக்க உள்ளோம். சந்தோஷ் நாராயணன் இசை. பாலிவுட்டில் இதுதான் அவருக்கு அறிமுகம். இவ்வாறு சசிகாந்த் கூறினார்.