சென்னை: தி எக்ஸ்பெண்டபிள்ஸ் 3 ஹாலிவுட் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த ஆக்ஷன் விருந்தை தமிழிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். ஹாலிவுட்டின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டோலன் உருவாக்கியுள்ள இந்த படத்தில் அவருடன் அர்னால்டு நடித்திருக்கிறார். மெல் கிப்சன், ஹாரிசன் ஃபோர்ட் ஆகிய ஆக்ஷன் ஹீரோக்களும் இணைந்திருப்பதால் பரபரப்பான ஆக்ஷனுக்கு இந்த படத்தில் பஞ்சம் இருக்காது என உறுதி தருகிறார் ஸ்டோலன். அவர் கூறுகையில், ஆரம்ப காலகட்டத்தில் நானும் அர்னால்டும் போட்டியாளர்களாக இருந்தோம். அதனால் எங்களுக்குள் பகையும் இருந்தது. வயது கூடிக்கொண்டே போனபோதுதான் எங்களுக்குள் இருந்த பகை மறந்து நண்பர்கள் ஆனோம். இப்போது இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கும் அளவுக்கு தோழர்கள் ஆகிவிட்டோம். இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு சரவெடியாக அமையும் என்றார்.