மாஜி லவ்வர் டாட்டூவை மறைத்த நயன்தாரா
சென்னை: மாஜி காதலன் பிரபு தேவா டாட்டூவை மறைத்தபடி சேலை உடுத்தி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார் நயன்தாரா.நடிகை நயன்தாரா தனது இடது கையில் மாஜி காதலன் பிரபு தேவா பெயரை பச்சை (டாட்டூ) குத்தி இருக்கிறார். அவரைவிட்டு பிரிந்ததையடுத்து டாட்டூவை அழிப்பதுபற்றி ஆலோசித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் அதற்கான அவகாசம் இல்லாமல் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படங்களில் நடிக்கும்போதும், மாடர்ன் உடைகள் அணிந்து வரும்போதும் டாட்டூ பளிச்சென தெரிகிறது. குறும்புக்கார புகைப்படக்காரர்கள் அதை புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிடுகின்றனர்.
சமீபத்தில், ஆர்யா தயாரிக்கும் ‘அமரகாவியம் ஆடியோ விழாவுக்கு வந்த நயன்தாராவின் கையில் டாட்டூ பளிச்சிட்டதை புகைப்பட நிபுணர்கள் கிளிக் செய்தனர். இது நயன்தாராவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றொரு விழாவுக்கு வந்த நயன்தாரா சிறிதளவும் டாட்டூ வெளியில் தெரிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டார். கருப்பு நிற சேலையுடன் வந்த அவர் முழங்கை வரை சேலை தலைப்பை வைத்து மறைத்திருந்தார். நிகழ்ச்சி முழுவதும் இதிலேயே கவனமாக இருந்து டாட்டூவை மறைத்தபடி அமர்ந்திருந்தார். அதையும் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து, ‘மாஜி காதலன் டாட்டுவை மறைத்த நயன்தாரா என்று தலைப்பிட்டு இணைய தளத்தில் வெளியிட்டனர்.