அஞ்சலி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமா?
சென்னை: அஞ்சலி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதுபற்றி முடிவு செய்யவில்லை என்றார் காஜல் அகர்வால்.தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கடந்த ஆண்டுவரை பிஸியாக இருந்த காஜலுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறது. இந்நிலையில் அஞ்சலி நடிக்கும் ‘கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் காஜல் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவரது ரசிகர்களும்,நண்பர்களும், ‘ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்ட வண்ணம் இருந்தனர். இதனால் கோபமடைந்த காஜல் கூறும்போது,‘ஏதாவது ஒரு படத்தில் நான் குத்தாட்டம் ஆடுவதாக இருந்தால் அதுபற்றி ரசிகர்களுக்குத்தான் முதலில் தெரிவிப்பேன். அதுவரை இதுபோல் வரும் தகவல்களை நம்பாதீர்கள். தற்போது ‘கோவிந்துடு அன்டரிவாட்லே என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன் என்றார். தமிழில் பாலாஜி மோகன் இயக்கும் படமொன்றில் காஜல் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.