உத்தரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் உத்தரமேரூரில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலர் ஜேஸ்மின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வாலாஜாபாத் கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்து, 450 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், வட்டாட்சியர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.