ரஷ்ய ரூபிள் நோட்டில் ஆபாச படம் அச்சடிப்பு: எம்பி கிளப்பும் சர்ச்சை
மாஸ்கோ: ரஷ்யாவின் கரன்சியான ரூபிள் நோட்டில் ஆபாச படம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த நோட்டை திரும்ப பெற வேண்டும் என்று எம்பி ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ரஷ்யாவின் தேசிய விடுதலை ஜனநாயக கட்சியின் எம்பியாக இருப்பவர் ரோமன் குத்யாகோவ். இவர் அந்நாட்டு கரன்சியான ரூபிள் நோட்டில் ஆபாச படம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் 100 ரூபிள் நோட்டில் கிரேக்க நாட்டின் பழங்கால கடவுளான அப்பல்லோவின் படம் பொறிக் கப்பட்டுள்ளது. அப்பல்லோ குதிரையின் மீது சவாரி செய்வது போன்று அந்த படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த படமானது மாஸ்கோவில் உள்ள போல்சாய் தியேட் டர் முன்பாக நிறுவப்பட்டுள்ள சிலையின் புகைப்படமாகும். இதில் அப்பல் லோ ஆபாச தோற்றத்துடன் இருப்பதாக எம்பி ரோமன் குத்யாகோவ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் எனது மகனை அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். அப்போது இரண்டு மாணவர்கள் 100 ரூபிள் நோட்டை பார்த்து கேலி பேசி சிரித்துக் கொண்டு சென்றதை பார்த்தேன். அந்தரங்க உடல் உறுப்புகளை அப்பட்டமாக வெளிக்காட்டும் படங்கள் குழந்தைகளின் மனதை பாதிக்கின்றன என தெரிந்தது. எனவே இந்த நோட்டை அரசு திரும்ப பெற்றுக் கொண்டு வேறு படத்தை அச்சடித்து வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.