கங்கையை சுத்தப்படுத்த ரூ.2,037 கோடி திட்டம்
கங்கை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கங்கையை சுத்தப்படுத்த ஒருங்கிணைந்த கங்கை நதி திட்டத்துக்காக ரூ.2,037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கங்கையை சுத்தப்படுத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் நிதியுதவி பெறப்படும். நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் புதிதாக 12 அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும். உள்கட்டமைப்பு துறைக்கு நிதி உதவி மற்றும் கடன் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படும். நலிவடைந்த பிரிவினர் முன்னேற்றத்துக்காக அனைத்து குடும்பங்களுக்கும் வங்கி வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறிய வங்கிகள் அமைப்பதற்காக புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும்.