ரூ.500 கோடியில் 5 புதிய ஐஐடி
5 புதிய ஐஐஎம் மற்றும் 5 புதிய ஐஐடிக்கள் நிறுவ ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கருப்பு பண விவகாரம் திறமையாக கையாளப்படும். உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் பொருட்கள் மீது வழங்கப்பட்டு வரும் மானியங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். நலிவுற்ற பிரிவினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதில் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.புதிய உரக் கொள்கை வகுக்கப்படும். ரூபாய் நோட்டில் கண்பார்வையற்றவர்கள் கண்டறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் ரூபாயின் மதிப்பு குறிப்பிடப்படும். கிராம புறங்களில் பிராட்பேண்ட் வசதிக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்திற்காக ரூ.4000 கோடி.லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ரூ.100 கோடியும் மதரசாக்களை நவீனப்படுத்த ரூ,100 கோடியும் ஒதுக்கப்படும். தேசிய வீட்டு வசதி வங்கி மூலமாக கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8000 கோடி சுத்தமான குடிநீர் வசதிக்காக ரூ.3650 கோடியில் திட்டங்கள்.