ஸ்ரீகாந்தை வைத்து படம் தயாரிக்கும் மனைவி
சென்னை: ஸ்ரீகாந்தை வைத்து அவரது மனைவி படம் தயாரிக்கிறார்.‘ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் காதலித்து மணந்தவர் வந்தனா. சமீபகாலமாக ஆர்யா, தனுஷ், ஜீவா, சசிகுமார் போன்றவர்கள் சொந்த படம் தயாரிக்கின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீகாந்த் குடும்பமும் தயாரிப்பில் குதித்திருக்கிறது. அவரது மனைவி வந்தனா ‘நம்பியார் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஸ்ரீகாந்த் ஹீரோ. சுனேனா ஹீரோயின். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். கணேஷா இயக்குகிறார். இதன் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது சூர்யா வெளியிட சரத்குமார் பெற்றார்.
இப்படம்பற்றி கணேஷா கூறும்போது, ‘ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஒரு கெட்டவன் ஒளிந்திருக்கிறான். அந்த கெட்டவன் வெளியே வந்தால் என்ன நடக்கும், அந்த கெட்டவனை அழித்தால் எல்லோரும் எப்படி எம்ஜிஆர் ஆகலாம் என்ற கருத்தை சொல்லும் கதையாக இது உருவாகி இருக்கிறது. ஸ்ரீகாந்த் மனதுக்குள் ஒளிந்திருக்கும் கெட்டவனாக சந்தானம் நடிக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். என் ரெக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியில் செல்லும்போது திருப்தியாக செல்ல வேண்டும் என்று விஜய் ஆண்டனி கூறினார். அதற்கு ஏற்ப இசை அமைத்திருக்கிறார் என்றார்.