கணவனை விட்டு தர மனைவியிடம் ரூ10 லட்சம் பேரம் பேசிய கள்ளக்காதலி
திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே நயினார்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வினோதினி (23). திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் என்ற சத்யா (23). பேச்சியம்மாள் மதுரை ஊர்காவல் படையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நாகராஜுக்கும், பேச்சியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் தனியாக வீடு பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்த விஷயம் நாகராஜ் மனைவி வினோதினிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக வினோதினிக்கும், பேச்சியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. பேச்சியம்மாள் வினோதினியிடம் ‘ரூ.10 லட்சம் தருகிறேன். உனது கணவனை விட்டுக் கொடுத்து விடு‘ என கூறியுள்ளார். இதற்கு பேச்சியம்மாள் தந்தை வானமாமலை, தாய் பாண்டியம்மாள் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் 4 பேரும் சேர்ந்து வினோதினியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக வினோதினி அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.