ஜனாதிபதி பிரணாப் 19ல் தமிழகம் வருகை
தஞ்சை:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 19ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சை விமானப் படை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மதியம் 1 மணிக்கு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பின் காரில் மீண்டும் தஞ்சை விமானப்படை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக புதிய கட்டிட திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் அவர் திருச்சி வந்து தேசிய தொழில்நுட்ப மைய(என்ஐடி) பொன்விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.