பொது இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை:மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த பல ‘மாற்று முறை மின் கட்டண சேவைகளை’ மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில் பொது மக்களுக்காக அரசுத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மின் கட்டணம் செலுத்தும் வசதி.இந்த பொது இ-சேவை மையங்களில் மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத்தை பணம் அல்லது காசோலை அல்லது கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை இந்த பொது இ-சேவை மையங்கள் செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.