எழும்பூரில் பணியில் இருந்த செக்யூரிட்டி மர்ம சாவு
சென்னை: எழும்பூரில் இரவு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி இன்று காலை சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.எழும்பூர் பாந்தியன் சாலையில் தனியாருக்கு சொந்தமான செருப்பு கடை உள்ளது. இங்கு காவலாளியாக எம்கேபி நகரை சேர்ந்த கான் (64) என்பவர் பணியாற்றினார். இன்று காலை சடலமாக அதே இடத்தில் கிடந்தார். காலையில் கடைக்கு வந்த கடை உரிமையாளர் இது குறித்து, எழும்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது திடீர் மாரடைப்பா என தெரியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.