அஜீத் பற்றி கருத்து : கே.எஸ்.ரவிகுமார் ஷாக்
சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் என்று நான் கூறவில்லை என கூறி இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி நடிக்கும் ‘லிங்கா படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். இந்நிலையில் விஜய்-அஜீத் இருவரில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அஜீத்தான் சூப்பர் ஸ்டார் என்று டுவிட்டரில் ரவிகுமார் கருத்துவெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையறிந்து ஷாக் ஆனார் ரவிகுமார். இதுகுறித்து தனது பேஸ்புக்கில் ரவிகுமார் கூறும்போது, ‘எனக்கு டுவிட்டரில் பக்கம் இல்லை. என் பெயரில் உள்ள பக்கம் போலியானது. இணைய தளங்களில் பல போலி பக்கங்கள் உள்ளன. அதுபோல்தான் என் பெயரில் டுவிட்டரில் உள்ள பக்கமும். பேஸ்புக்கில்தான் எனக்கு பக்கம் உள்ளது. திரையுலகில் எனக்கு மதிப்புள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து கேட்டிருக்கின்றனர். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை நான் எப்படி முடிவு செய்ய முடியும். அதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஜய், அஜீத் இருவருடனும் நான் பணியாற்றி இருக்கிறேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.இவ்வாறு பேஸ்புக்கில் கூறி இருக்கிறார் ரவிகுமார்.