பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டி யில் சா போலோ நகரில் இன்றிரவு 1.30 மணிக்கு இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில், முன்னணி அணிகளான அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன. இந்த உலக கோப்பையிலேயே ரசிகர்களால் உற்று கவனிக்கப்படுபவர் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி. உலக கோப்பையில் அர்ஜென் டினா அணி தன்னிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் வெளிப்படுத்த மெஸ்சி சற்றும் தவறவில்லை. முக்கியத்துவம் வாய்ந்து கோல்களை அடிப்பது, மற்றவர்கள் கோல் அடிக்க உதவுவது, எதிரணி வீரர்களிடையே இடைவெளி ஏற்படும் வகையில் பந்தை கடத்திச் செல்வது, சக வீரர்கள் கோல் அடிக்கத் தேவையான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என பிரேசில் உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் உலக கால்பந்து ரசிகர்களை மெய்மறக்கச் செய்து வருகிறது. தனது மந்திரக்காலால் பந்தை கடத்தி சக வீரர்களுக்கு அவர் உதவும் பாங்கை பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் அனைவரும் காண முடிந்தது. அப்போது, கோல் அடித்தவர் கோன்சாலோ ஹிகுயின். ஆனால், அவர் கோல் அடிக்க தேவையான இடைவெளியை உருவாக்கி பந்தை அவருக்கு அனுப்பி, கோல் அடிக்க அனுமதித்தவர் மெஸ்சி.
நாக்-அவுட் சுற்றுகளில் அர்ஜென்டினா தனது தடுப்புக்களத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளது முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. லீக் சுற்றில் பெரும்பாலான போட்டிகளில் அர்ஜென்டினாவின் தடுப்புக்களத்தில்தான் பலவீனம் காணப்பட்டது. ஆனால், அதை அர்ஜென்டினா அணி சரி செய்து விட்டதை பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் காண முடிந்தது. இன்றைய போட்டியி லும் அர்ஜென்டினாவின் துருப்புச்சீட்டு மெஸ்சிதான். மிகச்சிறந்த வீரரான அவரைப் போன்றவர்க ளால், எதிரணியினர் கணி க்க முடியாத வகையிலான ஆட்டத்தை எப்போதும் ஆட முடியும். இதனால், இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் மெஸ்சியை முற்றுகை யிடுவதை காண முடியும்.
காயம் காரணமாக டி மரியா இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், மெஸ்சிக்கு பொறுப்பு கூடியுள்ளது. உலக கோப்பையில் மற்ற அணிகளைக் காட்டிலும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்ட அணி நெதர்லாந்து. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியினர் விளையாடிய விதத்தைப் பார்க்கையில், அது எத்தகைய அபாயகரமான அணி என்பதை விளக்கும் வகையில் இருந் தது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கிடைத்த வெற்றி, நெதர் லாந்து அணிக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. அந்த அணிக்கு கவலை அளிக்கும் விஷயம் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பதுதான். இதனை கோஸ்டாரிகாவுக்கு எதிரான போட்டியில் நன்கு உணர முடிந்தது.
உலக கோப்பை யில் இப்போதுள்ள நிலை யில், கோல் அடிக்க கிடைக் கும் ஒரு வாய்ப்பை தவற விட் டாலும் அது போட்டியின் முடிவைத் தீர்மானிக்கக் கூடும். ஆனால், கோச் வான் காலின் சமயோஜித முடிவுகள் இந்த உலக கோப்பையில் நெதர்லாந்து க்கு சாதகமான முடிவுகளைத் தந்திருக்கிறது. வான் கால் தனது அணி பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார். எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் விதமும் அவரது மூளையில் ஒளிந்திருக்கிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இன்றைய போட்டி இரு அணிக்கும் வாழ்வா,சாவா பிரச்னை என்பதால், இரு அணி வீரர்களுமே வெற்றிக்காக உயிரைக் கொடுத்து போராடுவார்கள். இதனால், வெற்றி இரு அணிக்குமே 50: 50 என ஊசலாட்டத்திலேயே உள்ளதாக கால்பந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதிக வெற்றி பெற்ற நெதர்லாந்துஅர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் நெதர்லாந்து அணி 4 முறையும், அர்ஜென்டினா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. இவற்றில் நெதர்லாந்து 13 கோல்களையும், அர்ஜென்டினா 6 கோல்களையும் அடித்துள்ளன.