பிரேசில் கால்பந்து வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தான். சொந்த மண்ணில் எப்படியும் தங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை முற்றிலும் தகர்த்தெறிந்தது ஜெர்மனி. 90 நிமிட ஆட்டத்தில் கொஞ்சமும் சளைக்காமல் 7 கோல் அடித்து, 5 முறை உலக கோப்பையை வென்றவர்கள் என இருமாப்புடன் இருந்த பிரேசிலை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்து ஜெர்மனி.இந்த உலக கோப்பை போட்டியில் அரை இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தாலும் பெரிய அளவில் பிரேசில் பிரகாசிக்கவில்லை என்பதே நிதர்சனம். லீக் போட்டியிலேயே மெக்சிகோவுக்கு எதிராக டிரா செய்தது, நாக் அவுட் சுற்று, மற்றும் கால் இறுதி போட்டியில் திணறி தான் பிரேசில் வெற்றி பெற்றது.ஒரு கட்டத்தில் தங்கள் அணி வீரர்கள் மனரீதியாக பலவீனமடைந்துள்ளனர் என்பதை அணியின் பயிற்சியாளர் ஸ்கோலாரி வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அது நேற்று நடந்த ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர் மட்டுமே. கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி போட்டியில் நெய்மரின் முதுகெலும்பு முறிந்தது. அரை இறுதி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் அணியின் கேப்டன் சில்வாவும் இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் அரை இறுதி யில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.முக்கிய வீரர்கள் இருவர் இல்லாத நிலையில், பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொண்ட பிரேசிலுக்கு கால்பந்து வரலாற்றில் மிக மோசமான நாளாகவே அமைந்தது. பெலோஹரிசாண்டோ நகரின் எஸ்டாடியோ மைதானம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30க்கு ஆட்டம் தொடங்கியது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஜெர்மனியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
ஆட்டத்தின் 10வது நிமி டமே பந்து ஜெர்மனி வீரர்களின் கால்களில் சிக்கி நர்த்தனம் புரிய ஆரம்பித்தது. வழக்கம் போல் இந்த ஆட்டத்தில் கோல் கணக்கை தொடங்கி வைத்தார் அந்த அணியின் தாமஸ் முல்லர். 11வது நிமிடத்தில் டோனி குரூஸ் மிக அழகாக இடது புறத்தில் இருந்த முல்லருக்கு பாஸ் செய்தார். பிரேசில் கோல் கீப்பரை லாவகமாக கண் அசைவில் ஏமாற்றி கோல் கம்பத்தின் இடதுபுறமாக தள்ளி முதல் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டியில் முல்லருக்கு 10வது கோல். பிரேசில் வீரர்கள் மனம் அப்போதே தளர்ந்து விட்டது.‘சாதனை’ குளோஸ் : அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 3 வாய்ப்புகள் நெருங்கி வந்தபோதிலும் கோல் அடிக்கும் வாய்ப்பு ஜெர்மனிக்கு தவறியது.
உலக கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவ வீரர் குளோஸ் கால்களில் இந்த முறை பந்து கிடைத்தது. 22வது நிமிடத்தில் முல்லரிடம் இருந்து ஒரு பாஸ் வாங்குகிறார் குளோஸ். அதை மீண்டும் முல்லருக்கு தருகிறார். இருவருக்குமிடையே நான்கு முறை பந்து கால்(கை) மாறுகிறது. 5 வது பாஸ் வாங்கிய குளோஸ் அதை கோலாக்கினார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் 16 கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை இதன் மூலம் குளோஸ் படைத்தார்.கருணையே இல்லாத குரூஸ்: பிரேசிலுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்தது. அடுத்தடுத்த அந்த நிமிடங்கள். 24வது நிமிடத்தில் தனது பங்குக்கு மிட் பீல்டர் குருஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்து மீண்டும் 26வது நிமிடத்தில் கதிராவிடமிருந்து பாஸ் வாங்கினார். அதை மின்னல் வேகத்தில் கம்பத்தின் வலது புறமாக தட்டி கோலாக்கினார். பிரேசில் கோல் கீப்பர் ஜீலியஸ் சீசர் முழுமையாக தளர்ந்து விட்டார்.
கதிரா கலக்கல்: சக வீரர்கள் ஆள், ஆளுக்கு கோல் அடிக்க மற்றொரு மிட்பீல்டரான கதிராவும் தன் பங்குக்கு ஆட்டம் காட்டினார். 29வது நிமிடத்தில் குரூஸ் கொடுத்த பாஸ் வாங்கி அதை அவரும் கோல் ஆக்கினார். இப்போது ஜெர்மனி 5-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. 6 நிமிடங்களில் 4 கோல். மைதானத்தில் திரண்டிருந்த பிரேசில் ரசிகர்கள் கதற தொடங்கினர். எல்லாமே முடிந்தது. முதல் பாதி ஆட்டத்திலேயே பிரேசில் அணியின் தோல்வி உறுதியானது. இரண்டாவது பாதி ஆட்டம் ஒப்புக்கு சப்பாணியாக தான் நடந்தது என்றே சொல்லவேண்டும். ஜெர்மனியின் கோல் உக்கிரம் தணிந்தது. ஆனாலும் அணியின் இடதுபுற மிட்பீல்டரான ஸ்குரூல் தனது பங்குக்கு 69, 79வது நிமிடங்களில் கோல் அடித்து எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார். ஆட்டம் முடியும் தருவாயில் பிரேசில் அணியின் ஆஸ்கர் ஒரு கோல் அடித்தார். சொந்த மண்ணில் பிரேசிலை துவம்சம் செய்து விட்டு மிகப்பெரிய எழுச்சியுடன் இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.பிரேசில் தோல்வி ரெக்கார்டுற
* 1938ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 கோல் வாங்கி தோல்வியடைந்தது.
* 1939ம் ஆண்டு ஜனவரி 15ல் ரியார்டோஜெனிராவில் (சொந்த மண் ணில்) அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் 5-1 என்ற கோல் கணக் கில் பிரேசில் தோல்வியை தழுவி யது. 7 கோல் வாங்கி மிக மோசமான தோல்வியை ஜெர்மனியிடம் பெற்றுள்ளது.
* உலக கோப்பை போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் 5 கோல் வாங்கிய அணி யும் பிரேசில் தான்.