பெண்ணிடம் 5 பவுன் அபேஸ்: பைக் ஆசாமிகள் கைவரிசை
தாம்பரம்: சேலையூர் சந்தோஷபுரம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் எலியாஸ். மனைவி ஷீபா (32). இருவரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றிரவு வேலை முடிந்ததும் கடையில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு தொல்காப்பியர் தெரு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் ஷீபா. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென ஷீபாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஷீபா சத்தம் போட்டும் பலனில்லை. இது குறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.