இயக்குனர் முடிவு கமல் கைவிரிப்பு
சென்னை: டோலிவுட் இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கவில்லை என்றார் கமல்ஹாசன்.தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் கமல் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் ‘விஸ்வரூபம் 2, ‘உத்தம வில்லன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘திரிஷ்ய ம் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் டோலிவுட் இயக்குனர் தேஜா சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது,‘கமல் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளேன். இதுபற்றி அவரிடம் பேசினேன். இந்த ஆண்டு இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்றார். இதனால் விநியோகஸ்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
திரிஷ்யம் ரீமேக்கில் நடிப்பதாக கமல் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் டோலிவுட் படத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டது எப்படி என்று கேட்டனர். இதுகுறித்து கமல் கூறும்போது,‘தெலுங்கு படத்தில் நான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. தெலுங்கு பட இயக்குனர்கள் சிலரிடம் சில விஷயங்கள் குறித்து நான் விவாதித்து வருகிறேன். ஆனால் எந்த இயக்குனர் படத்திலும் நடிப்பதாக ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை. தெலுங்கு படத்தில் நடிப்பது உறுதியானால் அந்த படம் எனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பேனரில்தான் தயாராகும்என்றார்.