Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
08
Jul
முதல் அரையிறுதியில் ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பிரேசில்?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரேசில்- ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான முதல் அரை யிறுதி ஆட்டம் இன்றிரவு நடக்கிறது. பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு பெலோ ஹரிசான்டே நகரில் உள்ள மினெய்ரோ ஸ்டேடியத்தில் நடக் கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில், பிரேசில்-ஜெர்மனி அணிகள் களமிறங்குகின்றன. நாளை நடைபெறும் 2வது அரை இறுதியில் அர்ஜென்டினா -நெதர் லாந்து அணிகள் மோத உள்ளன.

முதலாவது அரையிறுதியில் மோதும் பிரேசில், ஜெர்மனி அணிகள் சம பலம் கொண்டவை. இரண்டு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள். இதனால், சற்றும் விட்டுக்கொடுக்காமல் விளையாட வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்குமே உள்ளது. பிரேசில் அணியில் முதுகெலும்பு முறிவு காரணமாக நெய்மர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. கேப்டன் தியகோ சில்வாவும் முரட்டுத்தனமான ஆட்டத்தின் காரணமாக 2 முறை மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிபா விதிப்படி இன்றைய போட்டியில் விளையாட முடியாது.

மாற்று கேப்டனைக் கொண்டு விளையாடினா லும், தியகோ சில்வாவின் இடத்தை நிரப்புவது கடினம். சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி கட்டாயம் வெல்ல வேண்டும் என்று பிரேசில் ரசிகர்கள் விரும்புகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளதால் பிரேசில் அணிக்கு இன்றைய போட்டி நெருக்கடி மிகுந்ததாக அமையும்மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி இந்த முறை சீராக விளையாடினாலும், அந்த அணி மீண்டும் ஒரு முறை பட்டம் வெல்லும் என்பது ஜெர்மனி ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த அணியின் நட்சத்திரம் தாமஸ் முல்லர் மட்டுமே நன்கு விளையாடி வருகிறது. அவரது சிறப்பான பங்களிப் பால் ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறி வந்துள்ளது.

அணியில் ஒரு வீரரை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது என்கின்றனர் கால்பந்து விமர்சகர்கள். அவர் ஒரு போட்டியில் ஜொலிக்காமல் போனாலும் ஜெர்மனி வெளியேறும் அபாயம் உள்ளது. ஜெர்மனி அணியின் பல மாக திகழ்பவர் கோல் கீப்பர் மேனு வல் நியூ யர். அவர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், பிரேசில் அணியை சொந்த நாட்டில் தோல்வியடையச் செய்த அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற முடியும்.நடவடிக்கை கிடையாதுகொலம்பியா-பிரேசில் காலிறுதிப்போட்டியின் போது பந்தைக் கைப்பற்றும் முயற்சியில் கொலம்பிய வீரர் ஜூவான் சுனிகாவின் கால் பட்டதால் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேசில் விடுத்த கோரிக் கையை ஏற்க பிபா மறுத்துவிட்டது. சுனிகா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று பிபா அறிவித்துள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement