Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Jul
பெடரரின் 4 மணி நேர போராட்டம் வீண் விம்பிள்டன் பட்டத்தை 2ம் முறையாக கைப்பற்றினார் ஜோகோவிச்


லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென் னிஸ் போட்டியில் நேற்று ஆடவர் ஒற்றையர் இறுதியாட்டம் நடந்தது. இதில் 7 முறை விம்பிள்டன் சாம்பி யன் பட்டம் வென்றவரான சுவிஸ் வீரர் ரோஜர் பெட ரரர், செர்பியாவின் நோ வாக் ஜோகோவிச்சுடன் மோதினார். பலம் வாய்ந்த இரு வீரர்கள் மோதிய போட்டியைக் காண இளரவசர் வில்லியம், அவரது மனைவி கேத், டேவிட் பெக்காம், நடிகர்கள் பிரா ட்லி கூப்பர், சாமுவேல் எல்.ஜேக்சன், கிறிஸ் ஹெம் ஸ்வொர்த் என முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். இந்தப் போட்டியில் ஒவ்வொரு புள்ளியையும் பெற இருவரும் கடுமையாகப் போராடினர். இதனால், ஆட்டம் படுவிறுவிறுப்பாக இருந்தது. ஒவ்வொரு புள்ளிக்கு அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப்பிளக்கும் வகையில் இருந்தது. இருவரும் தங்களது கேம்களை விட்டுக் கொடுக்காததால் முதல் செட் டைபிரேக்கர் வரை சென் றது. இதில் 7 புள்ளிகளை மட்டுமே ஜோகோவிச்சால் எடுக்க முடிந்தது. இதனால் முதல் செட் 7-6 என்ற கேம் கணக்கில் பெடரர் வசமானது. இரண்டாவது செட்டில் விஸ்வரூபம் எடுத்தார் ஜோகோவிச்.

இந்த செட்டில் சிறப்பாக விளையாடிய அவர் பெடரரின் சர்வீஸை முறியடித்து கேமை கைப்பற்றினார். இதன் மூலம் 6-4 என்ற கேம் கணக்கில் இரண்டாவது செட் ஜோகோவிச் வசம் சென்றது. இருவரும் தலா 1 செட் வென்ற நிலையில் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. மூன்றாவது செட் டில் இருவரும் தங்களது சர்வீஸ்களை காப்பாற்றிக் கொண்டதால் அந்த செட் மீண்டும் டைபிரேக்கருக்கு சென்றது. இந்த முறை டை பிரேக்கரில் வெற்றித்தேவதை ஜோகோவிச் வசம் வந்தார். இதில் 4 புள்ளிகளை மட்டுமே பெரரால் பெற முடிந்ததால் மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார் ஜோகோவிச்.நான்காவது செட்டின் துவக்கத்தில் மிகச்சிறப்பாக விளையாடிய ஜோகோவிச், 5-4 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்த போது பெடரர் தனது சர்வீஸில் செய்த தவறால் ஜோகோவிச்சுக்கு சேம்பியன்ஷிப்பை வெல்ல வாய்ப்பு உருவானது. அப்போது அபாரமாக ஏஸ் சர்வீஸ் வீசிய பெடரர், அப்போதைக்கு தோல்வியில் இருந்து தப்பினார். இந்தப்போட்டியில் அவர் வீசிய 29 ஏஸ் சர்வீஸ்களில் இதுவும் ஒன்று. அதன் பின்னர் தொ டர்ச்சியாக புள்ளிகளைக் குவித்ததுடன், ஜோகோவிச்சின் சர்வீஸ்களையும் அவர் முறியடித்தார். இதன் மூலம் 4ம் செட்டை 5-7 என்ற கேம் கணக்கில் கைப்பற்றினார் பெடரரர்.

சாம்பியனை நிர்ணயிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக அமைந்தது. இந்த செட்டில் பெடரரின் சர்வீஸை முறியடித்த ஜோகோவிச் 6&4 என்ற கேம் கணக்கில் அதனை கைப்பற்றினார். பைனலில் 6-7(7), 6-4, 7-6(4), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சுமார் 4 மணி போராட்டத்துக்கு பின்னர் வெற்றி பெற்றா ஜோகோவிச். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வெற்றி அவரது வசமானது. விம்பிள்டன் வெற்றியின் மூலம் ஜோகோவிச் உலக நம்பர் 1 இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார். ஜோகோவிச் இதுவரை 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவரது இரண்டாவது விம்பிள்டன் பட்டம் இது. எதிர்பாராத வருத்தம்போட்டிக்கு பின்னர் பெடரர் கூறுகையில், ‘’விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியது சிறப்பானது. வெற்றியோ, தோல்வியோ என்னைப்பொருத்தவரை விம்பிள்டன் பைனலில் விளையாடுவது சிறப்பான விஷயம். தோல்வியடைந்தது ‘எதிர்பாராத வருத்தம்‘தான், என்றார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement