திருத்தணி: திருத்தணி அருகே பொம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (38). இவர் திருத்தணியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல். இவர் தனது நிலத்தில் உள்ள பயிர்களை பாதுகாக்க இரும்பு கம்பியால் வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று அவரது நிலத்தில் இருந்த வேலியை மர்ம நபர்கள், வெட்டி எடுத்துச் சென்று விட்டனர். திருட்டுப்போன இரும்பு வேலியின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.காத்தவராயன் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரும்பு வேலியை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.