Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
05
Jul
புழல் ஒன்றிய திமுக செயலாளர் இல்ல திருமணம்

புழல்: புழல் ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் எம்.நாராயணன், கவிதா நாராயணன் ஆகியோரது உறவினர் சவுத்ரி, விஜயலட்சுமியின்  திருமணம் சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் அன்னை ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், கி.வேணு, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, ஆவடி சாமு.நாசர், பகலவன், ராஜேந்திரன், புழல் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.திமுக துணை பொதுச்செயலாளர் விபி.துரைசாமி, சட்டத்துறை செயலாளர் ஆர்எஸ்.பாரதி, அமைப்பு செயலாளர் பெவீ.கல்யாணசுந்தரம், முன்னாள் மேயர் சுப்பிரமணியன், ஆர்டி.சேகர், முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு, நிரர்வாகிகள் கிரிராஜன், சபாபதி மோகன், ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, ராமு, ஜெய்மதன், பாஸ்கர், தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முக.ஸ்டாலினுக்கு செங்கோல், நினைவு பரிசுகளை நாராயணன் வழங்கினார்.10ம் வகுப்பு பொது தேர்வில் 450 மதிப்பெண் பெற்ற சென்றம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பாரதிக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து முக.ஸ்டாலின் வாழ்த்தினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement